Thursday, December 10, 2009

ஞாநியின் ஓ பக்கங்களில் பாபர் மசூதி இடிப்புக்கான காரணம் பற்றிய அறிக்கையை முன்வைத்து

ஊரறிந்த ரகசியங்கள் -3

ரகசியம் 1:

பதினேழு வருட விசாரணைக்குப் பின் நீதிபதி லிபரான் கமிஷன் அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்கு யார் காரணம் என்பது பற்றிய அறிக்கையை அளித்திருக்கிறது.

இதில் சொல்லப்பட்டிருக்கிற எந்த விஷயமும் புதிது அல்ல. ஏற்கனவே ஊரறிந்த ரகசியம்தான். ஆர்.எஸ்.எஸ் வருடக் கணக்கில் திட்டமிட்டு தன்னுடைய பல்வேறு அவதாரங்களான விஸ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம், பி.ஜே.பி போன்றவற்றின் மூலமாக 1992ல் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. இதுதான் சாராம்சம்.

ஊரறிந்த ரகசியங்கள்

- 3

ரகசியம் 1:

பதினேழு வருட விசாரணைக்குப் பின் நீதிபதி லிபரான் கமிஷன் அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்கு யார் காரணம் என்பது பற்றிய அறிக்கையை அளித்திருக்கிறது.

இதில் சொல்லப்பட்டிருக்கிற எந்த விஷயமும் புதிது அல்ல. ஏற்கனவே ஊரறிந்த ரகசியம்தான். ஆர்.எஸ்.எஸ் வருடக் கணக்கில் திட்டமிட்டு தன்னுடைய பல்வேறு அவதாரங்களான விஸ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம், பி.ஜே.பி போன்றவற்றின் மூலமாக 1992ல் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. இதுதான் சாராம்சம்.

ஆர்.எஸ்..எஸ்சின் அணுகுமுறை சிக்கலும் நுட்பமும் மிகுந்த உத்திகளை தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படுத்துவதாகும். அது உருவாக்குகிற ஒவ்வொரு அமைப்பும் வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி ஒரே ஸ்வ நோக்கத்தை நோக்கி இயங்கக்கூடியவை. விஸ்வ ஹிந்து பரீஷத் ஆன்மிக வேஷம் கட்டி வரும். இளம் பக்தர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களைக் காலாட்படையாகப் பயன்படுத்துவதற்கு பஜ்ரங் தளம். அரசியல் களத்தில் ஆதரவைத் திரட்டுவதற்கு பி.ஜே.பி. அதற்குள்ளும் மிதவாதி, தீவிரவாதி என்று இரு பிரிவினர் இருப்பது போல போலித் தோற்றம் காட்டப்படும், ஆட்சி அதிகாரத்தை ஆங்காங்கே கைப்பற்றுவதற்காக இந்த உத்தி.

இரு வாதிகளின் இறுதி நோக்கமும் ஒன்றேதான்.

இப்படி ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு செயல்பட்டு மசூதியை இடித்த வரலாற்றை லிபரான் கமிஷன் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறது. இந்த இடிப்பு வேலையை செய்து முடிப்பதில் எப்படி வெவ்வேறு தலைவர்கள் வெவ்வேறு விதமாக செயல்பட்டார்கள் என்பதை கமிஷன் துல்லியமாக சுட்டிக் காட்டியிருக்கிறது.

மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதுதான் இந்த தேசத்தின் கனவு என்று முழங்கிய அத்வானிகள் ஒரு பக்கம். அந்த இடம் மேடும் பள்ளமுமாக இருக்கிறது. அதை இடித்து சமன் செய்துவிட்டால், நாம் அங்கே உட்கார்ந்து தியானம் செய்யலாம் என்று பூடகமாகப் பேசிய வாஜ்பாயி போன்றமிதவாதிகள் இன்னொரு பக்கம்..

ரவுடி சாமியார்கள், சாதுவான சாமியார்கள், ரவுடித்தனமான அரசியல் தலைவர்கள், சாதுவான அரசியல் தலைவர்கள், மீடியாவுக்குள் பத்திரிகைகளுக்குள் ஊடுருவி தங்களுக்கு சாதகமான கருத்தைப் பரப்புபவர்கள், எதிர்க் கருத்துள்ள மீடியா பத்திரிகைக்காரர்களை மிரட்டி அடித்து உதைப்பதற்கான கர சேவகர்கள் என்று பலதரப்பட்டவர்களை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தியிருப்பதை லிபரான் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் இருப்பவர்கள், விமர்சகர்கள், தொடர்ந்து அரசியலை கவனித்து வரக்கூடிய காமன் சென்ஸ் உள்ள பொது மக்கள் எல்லாருக்கும் இந்த உண்மைகள் எப்போதுமே தெரிந்தவைதான். முதல்முறையாக ஒரு சட்டபூர்வமான விசாரணைக் கமிஷன் இதையெல்லாம் ஆவணப்பூர்வமாக பதிவு செய்திருப்பதுதான் லிபரானின் சாதனை.

கமிஷன் அறிக்கையை அரசு வெளியிடுவதற்கு முன்னரே அது பத்திரிககளில் கசிந்ததை ஒரு பிரச்சினையாக்கி குளிர் காய பி.ஜே.பி சங்க பரிவாரங்கள் முயற்சிக்கின்றன. ஜனநாயக அமைப்பில் அரசின் செயல்பாடுகள், விசாரணை அறிக்கைகள் எதுவும் ரகசியமாக இருக்கக் கூடாது. இருந்தால் அதை அம்பலப்படுத்துவதுதான் சரி. எம்.ஜி.ஆர் ஆட்சியில் 1982ல் திருச்செந்தூர் கோவில் அதிகாரியின் மர்ம சாவு பற்றிய பால் கமிஷன் அறிக்கையை அப்போது எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர் கருணாநிதி அம்பலப்படுத்தினார். அதற்காக இப்போது கலைஞரின் செயலராக இருக்கும் சண்முகநாதன் உள்ளிட்ட சில அதிகாரிகள் மீது எம்.ஜி.ஆர் அரசு மோசமான பழி வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ( அப்போது தி.மு.கவால் வைரவேல் திருடன் என்று வர்ணிக்கப்பட்ட அன்றைய அறநிலைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இப்போது கலைஞரின் விஸ்வாச ஜால்ரா என்பது தனிக்கதை.)

லிபரான் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களிலிருந்து கவனத்தை திசை திருப்ப பி.ஜே.பி பல விதங்களில் முயற்சிக்கிறது. என்ன முயற்சித்தாலும் அப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பி.ஜே.பியின் முதல்வராக இருந்த கல்யாண் சிங்கின் ஆட்சி மசூதி இடிப்புக்கு முழு உதவி செய்ததை மறைக்க முடியாது. அப்போது கல்யாண்சிங் டெல்லியில்காங்கிரஸ் பிரதமராக இருந்த நரசிம்மராவையும் உச்ச நீதி மன்றத்தையுமே முட்டாள்களாக்கிய வரலாற்றை மறைக்க முடியாது. வாஜ் பாயி முதல் அத்வானி வரை அசோக் சிங்கல் முதல் உமாபாரதி வரை மசூதி இடிப்புக்கு அவரவர் பங்கை முழு அர்ப்பணிப்புடன் செலுத்தியதை மறைக்க முடியாது.

லிபரான் கமிஷன் அறிக்கையில் மிகப் பெரிய ஏமாற்றம் ஒன்றே ஒன்றுதான். குற்றவாளிகள் யார் யார் என்று பட்டியலிட்டுவிட்டு, அவர்கள் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டுவிட்டதுதான் வருத்தமாக இருக்கிறது.

ரகசியம் 2

கிரெடிட் கார்டுகளை ஏன் கிரெடிட் கார்ட் கம்பெனிகள் ஊக்குவிக்கின்றன என்பது இன்னொரு ஊரறிந்த ரகசியம். நம்மைக் கடன் வாங்கும் பழக்கத்தில் ஆழ்த்திவிட்டு பின்னர் நம்மிடம் விதவிதமான காரணம் காட்டி கந்து வட்டி வசூலிக்கலாம் என்பதுதான் உண்மையான காரணம்.

இணையத்தின் மூலம் பல்வேறு டிக்கட்டுகள் வாங்குவது முதல் நேரடி உபயோகம் வரை எல்லா பரிவர்த்தனைகளுக்கும் டெபிட் கார்டுகளை அனுமதிக்கும்நிலை இன்னும் ஏற்படவில்லை. உண்மையில் டெபிட் கார்டுதான் கிரெடிட் காரடை விட நம்பகமானது. பணம் கணக்கில் இருந்தால்தான் டெபிட் கார்டைப் பயன்படுத்த முடியும். கிரெடிட் கார்ட் கடன் வாங்கி செலவு செய்யும் வேலைதான்.

ஆனால் கடன் வாங்கி செலவு செய்யும் நுகர்வு மெஷின்களாக நம்மை மாற்ற நினைக்கின்றன வங்கிகள். அதனால்தான் அடிக்கடி போன் செய்து கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்ளும்படி நம்மை தொல்லை செய்கின்றன. உள் நோக்கம் ந்சம்மைக் கடனாளியாக்கி வட்டி வசூலிப்பதுதான்.

என் மருத்துவ நண்பர் ஒருவர் தமிழக அரசில் சுமார் 20 வருடங்களாகப் பணியாற்றிவருகிறார். அவரை கிரெடிட் கார்ட் வாங்கிக் கொள்ளும்படி தொலைபேசியில் பல வங்கிகள் தொல்லை செய்கின்றன. வேண்டாம் என்று சொல்லி வந்தவர் இணையத்தில் பல்வேறு டிக்கட்டுகள் வாங்க, கட்டணங்கள் செலுத்த கிரெடிட் கார்ட் பயன்படுமே என்பதால், கடைசியில் ஒரு வங்கியிடம் ஓகே என்றார். உரிய படிவங்களை எல்லாம் நிரப்பி விண்ணப்பித்தபிறகு வங்கி அவருக்கு கடிதம் அனுப்பியது. கடன் வாங்கும் தகுதி அவருக்கு இல்லை என்பதால் கிரெடிட் கார்ட் தர இயலாது என்று கடிதம்.

ஏன் அவருக்கு கிரெடிட் ஒர்த்திநெஸ் இல்லாமற் போய்விட்டது ?

மாதம் சுமார் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர். கிரெடிட் கார்டில் அதிகபட்சம் எவ்வளவு வரை கடன் தேவை என்று விண்ணப்பத்தில் கேட்டதற்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று சொல்லாமல், 25 ஆயிரம் வரை போதும் என்று சொல்லியிருந்தார். தன் ஒரு மாதச் சம்பளத்தை விட அதிகமாகக் கடன் வாங்கக்கூடாது என்று அவர் கருதியதே காரணம். ஆனால் அதை வங்கி மதிக்கவில்லை. இதுதான் நேர்மையாக இருப்பவர்களுக்கு நம் அமைப்பு தரும் மரியாதை. அவர் 2 லட்சம் வரை கிரெடி வாங்கிக் கடனாளியாகி வட்டி கட்டி அழிவதையே வங்கிகள் விரும்புகின்றன.

ரகசியம் 3

மது கோடாவை அவன் இவன் என்றெல்லாம் எழுதுகிறீர்களே நியாயமா என்று ஒரு நண்பர் கேட்டார். நான் ஜார்கண்டில் இல்லை என்ற வசதியில்தான் அப்படி எழுத முடிந்தது. இங்கே இருக்கும் ஊழல் அரசியல் தலைவர்களையும் நியாயபடி அவன் இவன் அவள் இவள் என்றுதான் எழுதவேண்டும். ஆனால் முடியாதே.

நம் மொழிப் பழக்கமே நம்மை கோளாறானவர்களாக்கி வைத்திருக்கிறது. பூக்காரி, டிரைவர், காய்கறி விற்பவர் போன்ற சமூகத்தின் அடிமட்ட உழைப்பாளிகளை எல்லாம் அவன் இவள் என்றுதான் சொல்லுகிறோம். நேர்மையாக இல்லாவிட்டாலும் கூட, உயர் பதவிகளில் இருப்பவர்களுக்குர்விகுதி. அதை எழுத்து நாகரீகம், சபை நாகரீகம் என்று சொன்னால், அந்த நாகரீகம் சாதாரண உழைப்பாளிகளுக்கு மட்டும் பொருந்தாதா ?

மது கோடா மீதான எந்த வழக்கும் தண்டனை வரை போகப் போவதில்லை. அடுத்த தேர்தலில் அவன் ஜெயித்தால் எல்லா வழக்கும் அவ்வளவுதான், இது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார் இன்னொரு வாசக நண்பர். இதுவும் ஊரறிந்த ரகசியம்தான். அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான் ஊழல் வழக்குகள், கொலை வழக்குகள் எதிலும் அவர்கள் கடைசியில் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பது ஊரறிந்த ரகசியமாக இருக்கிறது.

இந்தச் சமூகத்தில் மது கோடாக்கள் தண்டிக்கப்பட்டு சிறைக்குச் செல்வார்கள் என்ற நம்பிக்கை இப்போதைக்கு எனக்கும் இல்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள் போல நீதிபதிகளிலும் நேர்மையானவர்கள் மைனாரிட்டிகளாகவே இருக்கும் தேசம் இது. காசியாபாதில் ப்ராவிடண்ட் நிதி பணத்தை மோசடியாக எடுத்து ஊழல் செய்த வழக்கில் ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதி, ஏழு அலகாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகள், பல மாவட்ட நீதிபதிகள் குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டனர். அடையாளம் காட்டிய நீதி மன்ற ஊழியரும் மோசடிக் குற்றத்துக்குள்ளானவருமான அஷுடோஷ் அஸ்தானா சிறைக்குள்ளேயே மர்மமான முறையில் போன மாதம் செத்துப் போனார்.

இந்த நிலைமைகள் எப்போது மாறும் ? ஊழல் பேர்வழிகளைப் பொது மேடைகளில் பார்த்தாலே காறி உமிழும் மன தைரியம் நம் மக்களுக்கு எப்போது வரும் ? அவ்ர்களோடு மேடைகளைப் பகிர்ந்துகொள்ளும் அறிவுஜீவிகளை, அண்டிப் பிழைக்கும் இண்டெலக்சுவல்களைக் கண்டதும் காறி உமிழும் மக்கள் எப்போது உருவாவார்கள் ?

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று எழுதிய பாரதிக்குக் கூட தன் காலத்தின் பெரியவர்கள் மீது நம்பிக்கை இல்லை. அடுத்த தலைமுறைகளுக்குத்தான் சொன்னான். அந்தத் தலைமுறைகள்தான் நம்மை இன்றைய நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன.

இன்றைய குழந்தைகள் காலத்தில் மாற்றம் வருமா?

இந்த வாரப் பூச்செண்டு

தன்

74வது வயதில் போர் விமானத்தில் பயணம் செய்து கலாமுக்கு நானும் சளைத்தவர் அல்ல என்று நிரூபித்திருக்கும் குடியரசுத் தலைவி பிரதீபா பாட்டீலுக்கு .வா.பூச்செண்டு,

இந்த

வாரத் திட்டு

ஒரு

பக்கம் சமச்சீர் கல்வி என்று பேசிக் கொண்டு இன்னொரு பக்கம் கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆக்ரமிப்பு அகற்றல் என்ற பெயரில் 1500 ஏழை பள்ளிச் சிறுவர்களை 30 கிலோமீட்டருக்கு அப்பால் தூக்கியடிக்கும்தமிழக அரசுக்கு .வா.தி,

இந்த

வார பல்டி

எல்லா

வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை வாக்காளர்களுக்குக் கொடுத்திருக்கும் 49 பிரிவை நீக்க வேண்டும் என்று சில வருடங்கள் முன்பு சொன்ன டாக்டர் ராமதாஸ், இப்போது திருச்செந்தூர் ,வந்த வாசி இடைத்தேர்தல்களில் தன் கட்சியினர் 49 ஓவைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவித்திருக்கிறார்

.குமுதம் 28.11.2009

No comments:

Post a Comment